ஃசெப் தாமுவின் ஸ்டைலில் முந்திரி பக்கோடா! இப்படியும் செய்து பார்கலாமே!
நாம் எப்போதும் வீட்டில் பல உணவுகளை செய்வோம். ஆனால் ஒர சில உணவுகளளை ஒவ்வொரவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். அனேகமாக மாலைரெங்களில் எல்லோரும் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம்.
இது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை. இந்த ஸ்நாக்ஸ்களை நாம் வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலை நோயில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இதற்காக தான் இந்த பதிவில் ஃசெப் தாமுவின் ஸ்டைலில் முந்திரி பக்கோடா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முந்திரி – 250 கிராம்
- கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
- சோம்புத் தூள் - ¼ டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 1 ½ டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை சிறு அளவு
- உப்பு தேவையான அளவு
- பெருங்காயம் ஒரு சிட்டிகை
- எண்ணெய் தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு பொடி, உப்பு, மிளகாய் பொடி கருவேப்பிலை, சூடான எண்ணெய், தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.பின்னர் இதில் பெருங்காயம், முந்திரி, தண்ணீர் சேர்த்து மாவை கலக்க வேண்டும்.
இன்னும் சிறிய அளவு எண்ணெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அடுப்பில் எண்ணெய் சூடானதும், முந்திரி பக்கோடாவை உதரி, உதரியாய் சேர்த்து பொறித்து எடுக்கவும். இப்படி செய்து எடுத்தால் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |