ஒரே ஒருமுறை ரசம் இப்படி வைச்சிப் பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்களாம்
வீட்டில் அதிகமாக செய்யும் உணவில் ஒன்று தான் ரசம். இதனை ஒரே ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் வைத்தால் சுவை தாறுமாறாகவே இருக்குமாம்.
பொதுவாக ரசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும் ரசம் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.
தற்போது சுவையான ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
வரமல்லி - 1 டீஸ்பூன்
மளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 7
வரமிளகாய் - 1
பூண்டு - 7-8
ரசத்திற்கு...
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பெரிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
முதலில் புளியை நீரில் ஊற வைத்து நன்றாக கொட்டை எதுவும் இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் மல்லி, சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். அதனுடன் பூண்டு பற்களையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
பின்பு தக்காளி, கொத்தமல்லி இவற்றினை பொடியாக வெட்டி, கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலுடன் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும். இதில் தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கடுகு, வரமிளகாய், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின்பு புளி கரைசலை மொத்தமாக ஊற்றவும்.
கடைசியில் ரசத்தில் நுரைகட்ட தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு தற்போது அனைவரும் பருகலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |