Chef Venkatesh Bhat: எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு - பத்தே நிமிட ரெசிபி
கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும். இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள்.
இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும். அந்த வகையில் கிராமத்து சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த ரெசிபியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். ஆனால் இந்த ரெசிபி வித்தியாச சுவையில் சாப்பிட நன்றாக இருககும்.
தேவையான பொருள்கள்
- கத்தரிக்காய் - 100 கிராம்
- உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
- எண்ணெய், உப்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை - தலா ஒரு தேக்கரண்டி
அரைக்க
- பூண்டு - 5 பல்
- மிளகாய் வற்றல் - 6
- தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
- கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
செய்முறை
கத்தரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும்.
காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும். சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |