குக்வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தால் இளம்பெண் கர்ப்பமா? வெங்கடேஷ் பட் கொடுத்த ஷாக்
பிரபலமான விஜய் டிவி தொலைக்காட்சியில் பலவிதமான ஷோக்கள், சீரியல்கள் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில், ஒன்று தான் குக்வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
எந்த அளவிற்கு என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியையே டிஆர்பியில் தாண்டிய அளவிற்கு விறுவிறுப்பாக 3 வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது.
இறுதிக்கட்டத்தை நெறுங்கியுள்ள இந்நிகழ்ச்சியில், விரைவில் இந்நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும், செஃப் தாமு மற்றும் மகேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தாமு அறிவித்தார்.
நிகழ்ச்சி பார்த்தே பெண் கர்ப்பம்
இதனால் மகேஷ் பட் மட்டும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இதனிடையில், சமீபத்தி எபிசோட் ஒன்றில் பேசிய வெங்கடேஷ் பட் “குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
மேலும், குழந்தை பிறப்பதற்காக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம், குழந்தையுடன் வந்திருந்த மற்றொரு பெண், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார். மன அழுத்தம் குறைந்து, சந்தோஷமாக இருப்பாய். விரைவில் குழந்தை பிறக்கும் என சொல்லி உள்ளார்”.
அதைக் கேட்டு அந்த பெண்ணும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்க துவங்கி உள்ளார். இந்த குறிப்பிட்ட வீடியோ காட்சி மட்டும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி இது என்ன புது உருட்டா இருக்கே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Before you troll and laugh study abt ivf. People who r taking te treatment need to be stress free n hpy.
— DKN (@DineshK_N) May 28, 2022
This show giving them that, this ia what chef was saying.#CookWithComali3 #CookWithComali pic.twitter.com/h0bsW1mFCK