இட்லி, தோசைக்கு தொட்டுக்க வெங்காயத் துவையல்: 5 நிமிடத்தில் செய்யலாம்
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்லி, தோசை தான் உணவாக இருக்கும்.
அந்த தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள வெங்காயத் துவையல் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
சுவையான வெங்காயத் துவையல் செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 300 கிராம்
காய்ந்த மிளகாய்- 4
உளுத்தம்பருப்பு- 5
தேக்கரண்டி புளி- சிறிதளவு
நல்லெண்ணெய்- 6 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணைய்யை ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு என்பவற்றை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அதே எண்ணெய்யில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
வதக்கிய பொருட்கள் ஆறிய உடன் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அரைத்த பொருட்களை தாளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை எல்லாவற்றையும் அரைத்த துவையலோடு சேர்த்துக் கொட்டினால் வெங்காயத்துவையல் தயார்.