முஸ்லீம் என்பதால் இந்த பிரச்சினை வந்திருக்கும்… அடுத்த நொடியே அதிரடியாக பதில் கொடுத்து சர்ச்சையை கிளப்பிய வெண்பா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில், வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்கும் நடிகைதான் பரீனா.
இவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சர்ச்சையை கிளப்பும் விதமாக பதில் கொடுத்திருந்தாலும் இவரின் தையிரியத்தை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
ரசிகர் ஒருவர், ‘நீங்கள் முஸ்லீம் என்பதால் சினிமாவில் வருவதற்கு உங்கள் குடும்பத்தில் பல தடைகள் ஏற்பட்டு இருக்குமே?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பரீனா, ‘மதத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அது குறை சொல்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை நான் எப்போதுமே தவிர்த்து விடுவேன்’ என்று கூறியுள்ளார்.
மதத்தைப் பற்றிய சர்ச்சையான பதிலை அளித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பொது தளத்தில் தைரியமாக பதில் அளித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
சோஷியல் மீடியாவில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கும் பரீனா, ரசிகர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உடனுக்குடன் பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் காரணமாகவே பரீனாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது.