வேல ராமமூர்த்தி பேத்தி திருமண பிளவுஸ் மட்டும் இத்தனை லட்சமா? வாயடைத்து போன நெட்டிசன்கள்
எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி பேத்தி- வைஷ்ணவி திருமணம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
எம்.எஸ்.முருகன்- வைஷ்ணவி திருமணம்
கடந்த ஜூலை மாதம் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டு திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
அந்த வகையில், தமிழகத்தில் நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எஸ்.முருகன் தனது மகனுக்கு தமிழகமே திரும்பி பார்க்கும்படி திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளார்.
நடிகர் வேல ராமமூர்த்தியின் பேத்தியான வைஷ்ணவி தங்க ஆடை மற்றும் ஆபரணங்கள் என தங்கத்தினால் ஜொலித்தார்.
அதிலும் குறிப்பாக மணப்பெண் வைஷ்ணவி அணிந்திருந்த ஆடை தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட 8 லட்சம் மதிப்பிலான புடவை மற்றும் அவர் அணிந்திருந்த சாரி பிளவுஸ் 3 லட்சம் மதிப்புள்ளதாம். அத்துடன் நிறுத்தாமல் மணப்பெண் தலையில் வைத்த பூ முதல் கழுத்தில் போட்டிருந்த மாலை வரை தங்கம் எனவும் கூறப்படுகின்றது.
மேக்கப் மேன் கூறிய தகவல்
புடவையில் கூட ஆங்காங்கே வைரம் பதித்திருந்ததாக நிபுணர்கள் கூறுகிறார்கள். செண்டை மேளம், பல்லக்கு ஊர்வலம் என தமிழகமே வியந்து போனது.
திருமணம் குறித்து மேக்கப் மேன் கூறிய போது, “ இது போன்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தை நாம் தியேட்டரில்தான் பார்த்திருப்போம். ஆனால் நேரில் பார்த்து வியந்துவிட்டேன். வைஷ்ணவிக்கு நல்ல சருமம். அந்த அளவுக்கு ஸ்கின்னை மெயின்டெயின் செய்திருந்தார்.
மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்காக 5 நாட்களாக தேடி என்னை ஃபிக்ஸ் செய்தார்கள். டிரெண்டிங்கில் இருக்கும் மேக்கப் போதும் என சொன்னார்...” என திருமணத்தில் நடந்த சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி பேசியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |