அசைவ உணவுக்கு இணையான சைவ உணவுகள்- யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக சிலர் சைவ பிரியர்களாக இருப்பார்கள்.
இது அவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் இவற்றை அடிப்படையாக கொண்டு முடிவு செய்கின்றனர்.
சைவ உணவுகள் சாப்பிடும் பொழுது அசைவ உணவுகளுக்கு இணையான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளாக தெரிவு செய்து சாப்பிட வேண்டும்.
அசைவத்தினால் கிடைக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் சைவ உணவுகளில் பெரும்பாலும் கிடைப்பதில்லை.
சாப்பிடும் பொழுது மட்டன் கறி, சிக்கன் கபாப் என சுவையான பல உணவுகளை காணலாம். ஆனால் இதற்கு இணையான சத்துக்களை கொண்ட சைவ உணவு பற்றி பார்க்கலாம்.
அசைவத்திற்கு நிகரான சைவ உணவுகள்
1. புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பலாப்பழம், சோயாவில் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக இறைச்சி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
2. எளிதில் கிடைப்பதாலும், வளமான ஊட்டச் சத்துகள் இருப்பதாலும் பல பகுதிகளில் மீன்கள் முதல் இடத்தை பிடிக்கின்றன. மீனில் இருக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ராஜ்மாவில் இருக்கின்றன. மீன் சாப்பிட முடியாதவர்கள் ராஜ்மாவில் உணவுகள் செய்து சாப்பிடலாம்.
3. பாலை கூட அசைவ உணவாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் செடிகள் சார்ந்த பால்களை அருந்தலாம். அதாவது தேங்காய் பால், பாதாம் பால், சோயா பால் இதில் அடங்கும்.
4. அசைவ உணவுகளில் மிகப் பெரிய தட்டுப்பாடு பனீர் உணவுகளுக்கு இருக்கின்றது. இதை சாப்பிட விரும்பாதவர்கள் டோஃபு சோயா சாப்பிடலாம். இதில் புரதச்சத்து இருக்கின்றது. அத்துடன் பனீருக்கு நிகரான சுவையும் இருக்கும்.
5. பாதாம், வேர்க்கடலை அல்லது அரிசியுடன் சைவ பால் தயாரிக்க முடியும் என கூறப்படுகின்றது. தயிரை பயன்படுத்தி செய்யக்கூடிய கதி, லஸ்ஸி, சாஸ் உணவுகளுக்கு பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |