ஆண்கள் சாப்பிட கூடாத நட்ஸ் வகைகள் என்னணு தெரியுமா?
பல சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய நட்ஸ்வகைகளில் சிலவற்றை ஆண்கள் சாப்பிட கூடாததற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நட்ஸ் வகைகள்
நட்ஸ் வகைகளில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சிலர் தங்கள் உடல் எடையை குறைக்க நட்ஸ்களை சாப்பிடுவார்கள்.
நட்ஸ் நம் உடலில் ஏற்படும் அழற்சியின் அளவை குறைப்பதோடு வயதான அறிகுறிகளைத் தடுத்து, இதய நோய் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.
ஆளிவிதைகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ளது. மேலும் நார்ச்சத்து, வைட்டமின் பி1 மற்றும் காப்பர், மாக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களைக் கொண்டிருக்கின்றன.
சூரியகாந்தி விதைகளில் கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் டிரிப்டோபான் அமினோ அமிலம் போன்ற தாதுக்களும் உள்ளன.
சியா விதைகளில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களோடு ஒமேகா -3 ஃபேட்டி ஆசிடும் அதிகமுள்ளது. ஆளி மற்றும் சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றன.
ஆகையால் இதை பெண்கள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். அதே சமயம் இதில் பைடோஈஸ்ட்ரோஜன்கள் இருப்பதால் கூடுமானவரை ஆண்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.