உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் காய்கறிகள் என்ன தெரியுமா?
காய்கறிகள்
காய்கறிகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து என பல நன்மைகள் இருக்கின்றது.
அதாவது எதிர்காலத்தில் வரக்கூடிய இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவுகின்றது.

முக்கியமாக பெற்றோர்கள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை அவதானித்தால் அவர்களும் சாப்பிடுவார்களாம். அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் நம் உடலை AC இல்லாமல் குளிர்ச்சியாக வைக்க உதவும் காய்கறிகள் பற்றி காணலாம்.
வெள்ளரிக்காய்
கோடை காலத்தில் அனைவரும்விரும்பி சாப்பிடும் காய்கறியியில் ஒன்று தான் வெள்ளரிக்காய்.இதில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதனால் இது நம் உடலில் நீர்ச்சத்து அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இது நம் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. இதை அப்படியே வெட்டி சாப்பிடலாம் அல்லது சாலட்டாகவும் சாப்பிட்டால் இதில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம். குறிப்பாக வெளியே வெயிலில் செல்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காய் ஆகும்.

சுரைக்காய்
இதில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது. அதனால் இதை சாப்பிட்டால் இது நம் செரிமானத்தை சீர்ப்படுத்தி உடலில் உள்ள அதிக வெப்பத்தை குறைக்க உதவுகிறது. இதை நாம் பொரியலாகவும், அல்லது ஜுஸாகவும் குடிக்கலாம். அதிலும் வெப்பநிலை அதிகரிக்கும் காலங்களிலும், வெப்ப அலை வீசும் காலங்களிலும் சாப்பிட வேண்டிய ஒன்று சுரைக்காய் ஆகும்.

புடலங்காய்
புடலங்காயில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் வைட்டமின் A வைட்டமின் c மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதினால் இது நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரித்து வெப்பத்தை குறைக்கவும் அதினால் வரும் சோர்வையும் குறைக்கிறது. இது நம் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலை லகுவாக வைக்கும்.

பூசணிக்காய்
பூசணிக்காய் இயற்கையாகவே உடலை குளிர்ச்சியாக வைக்கும் ஒரு காய் ஆகும். இதிலும் வெள்ளை பூசணி சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதில் இயற்கையாகவே நிறைய நீர்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளதால் இது உடலில் வெப்பத்தை சமநிலையாக வைத்திருக்க உதவுகிறது. இதை பொரியலாகவும் சாப்பிடலாம் அல்லது ஜுஸாகவும் சாப்பிடலாம். இது நம் உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |