கரசாரமான Vegetable Pulao பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
இது குழந்கைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பபடும் உணவுகளில் ஒன்று.
சேமியாவுடன் காய்கறிகளை சேர்த்து Vegetable Pulao செய்யும் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
- சேமியா - 2 கப்
- வெங்காயம் - 3
- பச்சைமிளகாய் - 5
- தக்காளி - 3
- பீன்ஸ் - 20
- கேரட் - 2
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- கொத்தமல்லி - சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
- தனியா தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு இவை யாவற்றையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
வெறும் கடாயில் சேமியாவை பொட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்துக்கொள்ளவும். பின்பு வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதனையடுத்து அதில் பச்சை மிளகாய், துருவிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு உப்புடன், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக்கொள்ளவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும். சேமியா வெந்தது பொல பொல வென்று உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான சேமியா Vegetable Pulao தயார்.