சூடான சப்பாத்திக்கு ஒரு சூப்பரான காம்பினேஷன் என்ன தெரியுமா? சைவ பிரியர்களுக்கு இது பிடிக்குமாம்..
பொதுவாக சிலருக்கு சூடான சப்பாத்திக்கு என்ன சேர்த்து பரிமாறலாம் என்பது குறித்து சந்தேகம் இருக்கும்.
இதன்படி, சைவ பிரியர்களுக்கு ஏற்ப சப்பாத்திக்கான சூப்பரான சுவையில் வெஜிடபிள் மசாலா எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 2
காலிஃப்ளவர் சிறியது - 1
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - அரை கப்
இஞ்சி சிறிய துண்டு - 2
பச்சை மிளகாய் - 3
முந்திரி பருப்பு - 15
எண்ணெய் - 5 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
பட்டை சிறிய துண்டு - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
உப்பு - ஒரு ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எப்படி செய்யலாம்?
முதலில் வெஜிடபிள் மசாலா செய்வதற்கான தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். (வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் சிறியது, பீன்ஸ், பச்சை மிளகாய்) இதனையடுத்து வெங்காயம், இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிப்புக்கு தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சிறிது நேரத்திற்கு பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை போட்டு பச்சை வாசணை போகும் வரை தாளித்துக் கொள்ள வேண்டும்.
மசாலா வாசணை காய்நததும் அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்தவுடன் அதில் வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு கிளறிவிட்டு, தண்ணீர் சேர்த்து விட்டு மூடி கொதிக்க விட வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒரு 10 நிமிடங்களுக்கு பின்னர் மசாலாவிலிருக்கும் மூடியை எடுத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த சூப்பரான வெஜிடபிள் மசாலா தயார்!