சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க! சத்துக்கள் கொஞ்சம் கூட கிடைக்காது
நாம் அன்றாடம் சமைக்கும் செய்யும் சில தவறுகள் காய்கறிகளின் சத்துக்களை முழுவதுமாக அழித்து விடுகின்றது. அவ்வாறு நீங்கள் செய்யும் தவறுகள் என்ன என்பதையும், சத்துக்கள் வீணாகமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சமைக்கும் போது செய்யக்கூடாத செயல்
காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு கழுவ வேண்டும். காய்கறிகளை ஊற வைக்கும் அல்லது கழுவும் நேரத்தை குறைத்தல் மூலம், அதிக சத்து வீணாகாமல் தடுக்கலாம்.
காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்குவதன் மூலம், உயிர்ச்சத்துகள் சமைக்கும் போது, கழுவும் போதும் நீரில் கரைவது குறைக்கப்படுகின்றது.
தோல் சீவும் கருவியை பயன்படுத்தும் போது, மேற்புறத் தோலை மட்டும் நீக்குவதால், சத்துக்கள் வீணாவதிலலை. தண்ணீர் நன்றாக கொதித்த பின்பு, காய்கறிகளை போட்டு சமைப்பது நல்லது. காய்கறிகளை சமைப்பதற்கு ஆவியில் வேக வைத்தல், பிரஷர் குக்கர் போன்றவற்றை பயன்படுத்தி, சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கலாம்.
சமைக்கும் போது சமையல் சோடா தவிர்த்தல் வேண்டும். இல்லை, உணவிலுள்ள மிக அவசியமான உயிர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். காய்கறி சாலட், பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தயாரிப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களின் இழப்பை தடுக்கலாம். கசாலட் தயாரிப்பில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமிலங்களை சேர்ப்பதன் மூலம் காய்கறிகளிலுள்ள உயிர்ச்சத்து இழப்பு தடுக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |