சமைக்கும் உணவின் சுவையை கூட்ட வேண்டுமா? வெஜிடபிள் ப்ராத் ரெசிபி செய்து சேர்த்தால் போதும்
நாம் எல்லோருக்கும் உணவென்றால் மிகவும் சுவையாக இருப்பதை தான் எல்லோரும் விரும்புவோம். பொதுவாக நாம் கடைகளில் சென்று சாப்பிடும் போது அந்த உணவின் சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
வீட்டு சாப்பாடுகளை விட ஹோட்டல் சாப்பாடு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி இந்த சுவை வருகின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்த வெஜிடபிள் ப்ராத் எனும் தண்ணியை உணவில் ஊற்றி சமைக்கும் போது சுவை மிகவும் மேம்படும். இந்த வெஜிடபிள் ப்ராத் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- பிரியாணி இலை - 01
- பூண்டு - 20 பல்
- வெங்காயம் - 100 கிராம்
- கரட் - 100 கிராம்
- பீன்ஸ் - 100 கிராம்
- முட்டைகோஸ் - 100 கிராம்
- ப்ராக்லி - 100 கிராம்
- செலரி - 100 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- மிளகுப்பொடி - தேவையான அளவு
- தண்ணீர் - 1 லீட்டர்
செய்யும் முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, வெங்காயம், பூண்டு, போட்டு கொஞ்சம் வதக்க வேண்டும். இதற்கு பின்னர் கரட், பீன்ஸ், முட்டைனோஸ், செலரி, ப்ராக்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் காய்கறிக்கு ஏற்றவாறு உப்பு, மிளகுப்பொடியை சேர்த்து கொள்ள வேண்டும்.
பின்னர் 1 லீட்டர் தண்ணீரை சேர்த்து 30 நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு கண்ணாடி போத்தலில் ஊற்றி நீங்கள் 1 அல்லது 2 வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.
பின்னர் இந்த பிராதை நீங்கள் சமைக்கும் கிரேவி, சூப் போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தலாம். இந்த ரெசிபி உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தரும்.