சைவ பிரியர்களுக்கு ஏற்ற சூப்பர் ரெசிபி: வெஜ் ஆம்லேட் அதுவும் முட்டை இல்லாமல்!
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நன்றாக இயங்குவதற்கும் உணவு மிகவும் முக்கியமானதாகும். அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி.
ஆனால், இப்போதுள்ளவர்களுக்கு சைவ உணவை விட அசைவ உணவுதான் அதிகம் பிடித்திருக்கிறது. உண்மையில் அசைவ உணவு வகைகளைப் போலவே சைவ உணவிலும் அதிக புரதங்கள் நிறைந்த உணவு வகைகள் உள்ளன. அதனை நாம் தான் அறிந்து உண்ணுவதில்லை.
அந்தவகையில் நாம் இன்று புதிய ரெசிபியைத்தான் சுவைக்கப்போகிறோம் அதுதான் வெஜ் ஆம்லேட் முட்டையில்லாமல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – 3 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- வெங்காயம்- 2
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – இரண்டு
- சீரகத்தூள் – சிறிதளவு
- மிளகு தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை இவை அனைத்தையும் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லில் மிக்ஸ் செய்ததை எடுத்து அப்படியே ஊற்ற வேண்டும்.
பின் எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெஜ் ஆம்லெட் ரெடி.
சைவம் சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு சுவையான ஆம்லெட்