சக்க போடு போடும் Fanta ஆம்லேட்.. குவியும் மக்கள் கூட்டம்! இதன் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
பல ஆம்லேட் டிஷை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் உணவகம் ஒன்றில் Fanta ஆம்ப்லேட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள கடை ஒன்றில் ஃபண்டா (Fanta) ஆம்லேட் போடப்படுகிறது. இந்த ஃபேண்டா ஆம்லேடை சாப்பி அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதாக தெரிவிக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், உணவு குறித்து விமர்சனம் செய்யும் நபர் ஒருவர், சூரத்தில் உள்ள ஃபண்டா ஆம்லெட் போடும் உணவகம் ஒன்றுக்கு சென்று, அவர்கள் ஃபண்டா (Fanta) ஆம்லேட் தயாரிக்கும் முறைகளை கேட்டறிகிறார்.
உடனே கடைக்காரர் ஃபண்டா (Fanta) ஆம்ப்லேட் ஒன்றை செய்து காமிக்கிறார். இந்த வீடியோ 87,000 பேருக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் முட்டை மற்றும் ஃபாண்டாவின் இந்த வினோதமான கலவை நெட்டிசன்களை முற்றிலும் வெறுப்படைய வைத்துள்ளது. இந்த ஃபண்டா (Fanta) ஆம்ப்லேட்டின் விலை 250 ரூபாயாம்....