Veera(வீரா): பொய் சத்தியத்தால் வீராவிற்கு வந்த ஆபத்து - உண்மையை கூறிய மாறன்
வீரா மருத்துவமனையில் இருந்து கண்விழித்து பார்க்கும் போது மாறன் வீராவிடம் அனைத்து உண்மையையும் கூறுகிறான்.
வீரா
பிரபல டிவி நிகழ்ச்சியில் 400 எபிசோட்டுக்களை கடந்து வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் சீரியல் தான் வீரா.
இதில் முக்கிய கதாபாத்திரங்களாக மாறனின் மனைவி வீராவாக வைஷ்ணவி அருள்மொழி மற்றும் அருண் க்ரைசர் வீராவின் கணவர் மாறனாக நடித்து வருகின்றனர்.
இதை தவிர இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் மக்கள் மனம் கவர்ந்து வருகின்றனர். இந்த சீரியல் 'வீரா' என்ற பெயருடன் பிப்ரவரி 8, 2024 அன்று வெளியிடப்பட்டது.
உண்மையை கூறிய மாறன்
அதாவது இதுவரை வீராவின் அண்ணண் மரணத்திற்கு தான் தான் காரணம் என கூறியிருப்பார். வீராவிற்கு உண்மை தெரிந்தும் மாறன் அதை ஒப்புக்கொள்ளவில்லை.
விஜியை கையும் களவுமாக மாட்ட வைக்க வீரா மாறன் போட்ட திட்டத்தில் விஜி மாட்டிக்கொண்டாலும் அங்கு நடந்த துப்பாக்கியால் வீரா பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கபட்டுள்ளார்.
அந்த நேரத்தில் தான் செய் பொய் சத்தியத்தால் தான் வீராவிற்கு இந்த நிலை வந்துள்ளது என நினைத்து வீரா கண் விழித்தவுடன் நடந்த உண்மையை கூறுகிறான். இந்த ப்ரமொ காட்சி வீரா மாறனின் காதல் இணைவாக அமைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |