(வீரா) - மாறனை முழுதாக ஏற்றுக்கொள்ளும் கண்மணி : உண்மை தெரிந்தால் நிலை என்ன?
தன் அண்ணணை விபத்தில் மாறன் கொன்றதாக நினைக்கும் கண்மணி அவரை முழுதாக மன்னிக்கிறார். இதனை தொடர்ந்து கதைகளத்தில் மாற்றம் வரப்போகின்றத என எதிர்பார்க்கப்படுகின்றது.
வீரா
பிரபல டிவி நிகழ்ச்சியில் 400 எபிசோட்டுக்களை கடந்து வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் சீரியல் தான் வீரா.
இதில் முக்கிய கதாபாத்திரங்களாக மாறனின் மனைவி வீராவாக வைஷ்ணவி அருள்மொழி மற்றும் அருண் க்ரைசர் வீராவின் கணவர் மாறனாக நடித்து வருகின்றனர்.
ஆரம்ப எபிசோட்டுகளில் இதில் கண்மணி கதாபாத்திரத்தை யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் கண்மணி கதாபாத்திரம் விரும்பப்பட்டு வருகின்றது.
கடந்த எபிசோட்டில் வீரா விபத்தில் சிக்குண்டு மாறனுடன் சேர்ந்த காட்சிகள் காட்டப்பட்டன. இதனை தொடர்ந்த இன்று ஒளிபரப்பாகப்போகும் எபிசோட்டின் ப்ரொமொ காட்சி வெளியாகி உள்ளது.
மாறனை ஏற்றுக்கொள்ளும் கண்மணி
கண்மணியின் காப்பத்தின் பரிகாரத்திற்காக குடும்பம் மொத்தமும் கோவிலுக்கு சென்று வழிபட்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் கண்மணி தராசில் இருந்து பரிகாரம் செய்யும் போது கண்மணியின் தராசு சமமாகாமல் இருக்கின்றது.
இதற்கு மனதில் உள்ள அனைத்து பாரத்தையும் கண்மணி இறக்கி வைக்க வேண்டும் என கூற மாறனை கண்மணி முழுதாக மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.
இதனை தொடர்ந்து கண்மணிக்கு இதற்கான காரணம் ராகவன் என தெரியவந்தால் சூழ்நிலை எப்படி மாறும் என வீரா மாறன் யொசிக்கின்றனர். இதை தொடர்ந்து கதைகளம் எப்படி செல்லப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |