Singappenne: மித்ராவிடம் சென்ற ரகு... பரிதவித்து நிற்கும் ஆனந்தி, அன்பு
சிங்கப்பெண்ணே சீரியலில் மருத்துவமனையிலிருந்து கண்விழித்த ரகுவை மித்ரா கருணாகரனை வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் பரபரப்பான காட்சிகள் தற்போது அரங்கேறிய வருகின்றது.
குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வேலைக்கு வந்த கிராமத்து பெண்ணான ஆனந்தி, தன்னை சீரழித்தது யார் என்று கண்டுபிடிப்பதற்கு தற்போது முயற்சி செய்து வருகின்றார்.
ஆனந்திக்கு உதவியாக அன்பு இருந்து வரும் நிலையில், மருத்துவமனையில் இருக்கும் ரகு தற்போது கண்விழித்துள்ளார். ரகுவினால் தனது நிலைக்கு யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்ற முழு நம்பிக்கையில் ஆனந்தி இருக்கின்றார்.
ஆனால் மருத்துவமனையில் கண்விழித்த ரகுவை மித்ரா கருணாகரனை விட்டு அழைத்துச் சென்றுள்ளார். தற்போது ரகு மித்ராவிடம் இருக்கும் நிலையில், அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடுகின்றனர்.
மற்றொரு புறம் ஆனந்தி கோவிலில் சாமி முன்பு முறையிடுகின்றார். ஆனந்தியின் நிலையைக் கண்ட அன்புவும் செய்வதறியாமல் தவித்து நிற்கின்றார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |