சினிமா நடிகை எடுத்த புது அவதாரம்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
நடிகை வசுந்தரா காஷ்யப் தற்போது எதிர்பார்த்தளவில் சினிமாவில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் புதிதாக ஒரு வேலையை தொடங்கி உள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை வசுந்தரா காஷ்யப்
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை வசுந்தரா காஷ்யப். இவருடைய அப்பா தமிழ் அம்மக மராத்தி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
வசுந்தரா காஷ்யப் மாடர்லிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்தால் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று மிஸ் கிரியேட்டிவிட்டி பட்டம் வென்றார். பின்னர் தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதனை அடுத்து பல படங்களில் பல படங்களில் நடித்து கடைசியாக கங்குவா படத்திலும் நடித்திருந்தார். என்னதான் சினிமாவில் இவர் நடித்துக்கொண்டிருந்தாலும் அதன் வாய்ப்பு குறைவாகவே காணப்பட்டது.
இதனால் நடிகை வசுந்ரா புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் இப்போது எழுத்தாளராக மாறியுள்ளார். தி அக்கியூஸ்ட்" (The Accused) என்ற பெயரில் ஒரு கிரைம் நாவலை அவர் எழுதியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மர்ம கொலையை மையப்படுத்தி தி அக்கியூஸ்ட் என்ற நாவலை அவர் எழுதப்பட்டுள்ளது. நடிகையாக இருந்து தற்போது ஒரு எழுத்தாளராக மாறிய நடிகை வசுந்தரா காஷ்யப் இற்கு ரசிகர்கள் இணையவாசிகள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |