அலுவலக மேஜையில் இந்த பொருட்களை வைத்தால் போதும்! அதிர்ஷ்டம் ஏற்படும்
Vastu Tips for Office Table: நாம் பணி செய்யும் அலுவலகத்தில் பிரச்சனைகள் அதிகமாக இருந்தால் அதனை சரிசெய்யும் வாஸ்து குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினை கொண்டு செல்வதற்கு வேலை கட்டாயமாக இருக்கின்றது. அதிலும் தற்போது ஒருவர் மட்டுமின்றி வீட்டில் இரண்டு பேரும் வேலைக்கு செல்வது அவசியம் ஆகும்.
ஏனெனில் பிள்ளைகளின் தேவைகள், குடும்பத்தின் தேவைகள் இவற்றினை சமாளிக்க முடியும். ஆனால் நாம் வேலை செய்யும் இடத்தினை சுத்தமாக வைப்பது கட்டாயமான ஒன்றாகும்.

நீங்கள் மேஜையில் வைக்கும் சில பொருட்கள் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, தொழிலில் நல்ல வளர்ச்சியும், பதவி உயர்வு, பணவரவு இவற்றினை கொடுக்கின்றது.
அதிக நேரத்தினை செலவு செய்யும் மேஜையில் வாஸ்துபடி எந்த பொருட்களை வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஜையில் இந்த பொருளை வைங்க
மேஜையில் பசுமையான செடியாகிய மணி பிளாண்ட் மற்றும் மூங்கில் போன்ற செடிகளை வைப்பது நல்லது. இவை நேர்மறை ஆற்றலை் ஓட்டத்தினை அதிகரிப்பதுடன், பணியிடத்தில் புத்துணர்ச்சியுடன் வைக்குமாம்.

படிகார கல் இவற்றினையும் மேஜையில் வைக்கலாம். நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருளாக இது இருப்பதுடன், இந்த படிகார கல்லை மேஜையில் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது மன அமைதி, கவனத்தை அதிகரிக்கின்றது.

மேஜையினை எப்பொழுதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டும். நேர்மறை ஆற்றல் அதிகமாக நிரம்பியிருப்பதுடன், ஆபிஸ் பைல்கள், லேப் டாப், முக்கிய ஆவணங்களை ஒழுங்காக வைக்கவும்.
உங்களுக்கு மனதினை எப்பொழுது உற்சாகமாக வைக்கும் வாக்கியங்கள், புகைப்படங்கள் இவற்றினை மேஜையில் வைப்பது நல்லது. மன உறுதியை வலுவாக வைப்பதுடன், நேர்மறையான அணுகுமுறையும் அதிகரித்து வேலையின் இலக்கையும் அடையமுடியும்.
நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளரை மேஜையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுவதுடன், இவை நேர்மறை ஆற்றலை அளித்து வேலையில் முழு கவனத்தை செலுத்த முடிகின்றது. ஆனால் தினமும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். இவ்வாறு சில மாற்றங்களை கொண்டு வந்தால் உங்களது கவனம் எங்கும் சிதறாமல் வேலை செய்யலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |