அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க
பொதுவாகவே மனிதர்கள் மட்டுமன்றி சில விலங்குகளுக்கும் கூட கோபம் வருவது வழக்கம். உளவியல் ரீதியாக நமது மனம் ஏற்றுக்கொள்ளாத மனதிற்கு பிடிக்காத விடயங்கள் நடக்கும் போது கோபம் ஏற்படுகின்றது.
ஆனால் சில பேர் சற்று வித்தியாசமாக எல்லா விடயங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எப்போதும் கோபத்தை காட்டுவார்கள்.
இவ்வாறு அதிகப்படியான கோபத்திதை கட்டுபடுத்த வாஸ்து சாஸ்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் முறைமைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அடிக்கடி கோபம் வருவதற்கும் வாஸ்துவில் காரணங்கள் கூறப்படுகின்றது.
நாம் வீட்டு சூழல் சில சமயம் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும். இவ்வாறான நிலைமை உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் துர்திஷ்டத்தை கொண்டுவரும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிக கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமா?
வீடு கட்டுவது வாஸ்து படி இல்லாவிட்டால், வீட்டில் இருப்பவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. வாஸ்து நிபுணர்களும் இதையே குறிப்பிடுகின்றார்கள். வாஸ்து உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உள ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகின்றது.
வாஸ்த சாஸ்திரத்தின் அடிப்படையில் வீடு மிகவும் அழுக்காக இருந்தால், நீங்கள் எப்போதும் கோபப்படுவீர்கள் என்று கூறப்படுகிறது. எனவே கோபத்தை கட்டுப்படுத்த முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும், காலையில் எழுந்ததும் கைகளை ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளை 5 நிமிடம் பார்த்துக்கொள்வதன் மூலம் மனம் அமைதியடைகின்றது. இதனால் கோபம் அடங்குகின்றது.
இதன் பின்னர் இஷ்ட தெய்வத்தை மனதில் பிராத்தனை செய்துவிட்டு நாளை தொடங்கினால் நாள் இனிமையானதாக அமையும்.
மன அழுத்தத்தை குறைக்கவும், கோபம் வராமல் தடுக்கவும் எந்த சூழ்நிலையிலும் தென்கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் வீடடில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் இதனால் சிந்தனை தெளிவாகும்.
வீட்மு சுவர்களின் நிறமும் நமது உள ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த சூழ்நிலையிலும் வீட்டில் சுவர்களில் அடர் நிறங்களை பயன்படுத்த கூடாது.இது கோப உணர்வை மேலும் அதிகரிப்பதாக அமையும்.
கோபமாக இருக்கும் போது கல் உப்பை தண்ணீர் போட்டு அந்த பாத்திரத்தை அறையில் வைப்பதால் அறையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மனம் தெளிவடையும். அதனால் கோபம் குறையும்.
இத்த வாஸ்து முறையை பின்பற்றினால் தேவையற்ற விடயங்களுக்கு கோபப்படும் தன்மையை குறைத்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |