குழந்தைகள் பக்கத்துல இந்த பொருட்களை மறந்தும் வைக்காதீங்க- ஆபத்து நிச்சயம்!
பொதுவாக வீடுகளில் வாஸ்து சாஸ்த்திரங்கள் பார்ப்பது வழக்கம்.
இது எதிர்மறையான ஆற்றல்களை வீட்டிலிருந்து விரட்டி நேர்மறையான ஆற்றல்களை அதிகரிக்கின்றது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மூலதனமாக வாஸ்து குறிப்புக்கள் இருக்கின்றன.
அந்த வகையில், வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனமாக பார்த்து கொள்வது என்பது மிக அவசியம். அவர்கள் பக்கத்தில் சில பொருட்களை வைக்கவே கூடாது.
அப்படியான பொருட்கள் என்னென்ன? அதனை ஏன் வைக்கக் கூடாது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் பக்கத்தில் வைக்கக் கூடாத பொருட்கள்
1. சிலர் வீட்டில் அழகிற்காக முட்கள் கொண்ட செடிகளை வைத்திருப்பார்கள். ஆனால் இது போன்ற செடிகளை குழந்தைகள் அருகாமையில் வைக்கக் கூடாது. இந்த செடிகள் வீட்டிற்கள் எதிர்மறையான ஆற்றல்களை கொண்டு வரும். அத்துடன் தாவரத்திலுள்ள முட்கள் குழந்தைகளை காயப்படுத்தி ஆரோக்கிய குறைப்பாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
2. குழந்தைகள் இருக்கும் அல்லது விளையாடும் அறைகளில் கண்ணாடி வைக்கவே கூடாது. ஏனெனின் குழந்தைகள் தான் இருப்பதை அடிக்கடி கண்ணாடியில் பார்ப்பார்கள். இது அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். அத்துடன் குழந்தைகளின் கனவில் கூட அவர்களையே அவர்கள் கண்டு பயம் கொள்ளலாம்.
3. குழந்தைகள் என்றால் பொம்மைகள் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் குழந்தைகள் விளையாடும் பொழுது அவர்களின் கையில் உடைந்த பொம்மைகளை கொடுக்கக் கூடாது. இது அவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு பொம்பை உடைந்திருந்தால் அதனை உடனடியாக வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவது அவசியம்.
4. குழந்தைகள் அல்லது நீங்கள் இருக்கும் அறைகளில் கலைப்படைப்புகளை வெளிகாட்டுவது போன்ற பொருட்கள், புகைப்படங்களை வைத்திருப்போம். இது குழந்தைகளுக்கு அமைதியற்ற ஒரு சூழலை அதிகப்படுத்தலாம். குழந்தைகள் பார்த்து சந்தோஷப்படும் வகையில் புகைப்படங்களை மாட்டி வைப்பது நல்லது.
5. வீட்டில் எதிர்மறையான ஆற்றல்கள் குறைவாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அறைகளில் குறைவான தளபாடங்களை வைத்திருங்கள். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் காற்றோட்டம் மிக அவசியம். அவர்கள் நன்றாக சூரிய ஒளி தரும் இடங்களில் விளையாட வேண்டும். இது அவர்களின் உடல்நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |