வீட்டில் சிலந்தி வலை கட்டினால் அதிர்ஷ்டமா? அபச குணமா?
வீட்டில் சிலந்தி வலை காணப்பட்டால் வாஸ்துபடி அவை நல்லதா? அல்லது கெட்டதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிலந்தி வலை
பொதுவாக சிலந்தி வலைகளைக் குறித்து பலவித நம்பிக்கைகள் உள்ளது. இதனை சிலர் நல்ல சகுணம் என்றும் சிலர் கெட்ட சகுணம் என்றும் கருதுகின்றனர்.
அதாவது சிலந்தி நாம் குடியிருக்கும் வீட்டில் வலை பின்னினால் எதிர்மறை ஆற்றலை ஈரக்கும் எனவும் தீய சக்திகள் குடியேறும் என்ற நம்பிக்கை இன்று அநேக மக்களிடம் உள்ளது.
ஆனால் வாஸ்துபடி என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துரதிர்ஷ்டம் என்பது ஏன்?
வீட்டில் சிலந்தி வலை காணப்பட்டால் வாஸ்து குறைபாடு இருப்பதாகவும், எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வருமானம் கையில் தங்காது என்றும் கூறப்படுகின்றது.
பண பிரச்சனை மட்டுமின்றி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் பாதிப்பதுடன், உடல்நல பிரச்சனையும், தூசி மற்றும் அழுக்கை சிலந்தி வலை ஈர்ப்பதால் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்க்கு வழிவகுக்குமாம்.
ஆன்மீகம் மற்றும் ஆரோக்கியம் என இரண்டையும் கருத்தில் கொண்டுதான் சிலந்தி வீட்டில் வலை பின்னினால் அசுபமாக பார்க்கப்படுகின்றது.

மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் செங்குத்தான மூலைகளில் சிலந்த வலை காணப்பட்டால், அவை சொத்து மற்றும் செல்வம் இவற்றினை அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது.
சகுன சாஸ்திரத்தின்படி காலையில் எழும் போது சிலந்தி சுவரில் ஏறுவதை பார்த்தால் நல்ல அறிகுறியாகவும், தொழில், வேலையில் உயர் பதவியை அடைவதாகவும் அர்த்தமாம்.

அதே போன்று கனவில் சிலந்தி வலை பின்னுவது போன்று வந்தாலும் நல்ல சகுணமாகவே பார்க்கப்படுகின்றது. விரைவில் வெற்றிக்கு ஒரு வழியாகவும் இருக்கின்றது.
அதுவே சிலந்தி உங்களது ஆடையின் மீது விழுந்தால் அவை பணவரவைக் குறிப்பதாகவே கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |