இந்த பொருட்களை வீட்டில் காலியாக வைத்துள்ளீர்களா? இதனால் பணப்பிரச்சனை வருமாம்
நாம் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என்றால், வாஸ்து அடிப்படையில் சில விஷயங்களை நாம் சரியாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.
வாஸ்து டிப்ஸ்
வாஸ்து முறைப்படி சில விஷயங்களை நாம் செய்யும் போது அது நமது ஆன்மிகப்படி பிரச்சனைளை குறைக்கும். எனவே வாஸ்து மிகவும் முக்கியமானது என்று கூறலாம். நம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது.
குறிப்பாக, எதிர்மறையான சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி நாம் பல விதிகளை பின்பற்ற வேண்டும். இதில் சில பொருட்களை நாம் காலியாக விட்டால் பணத்திற்கு பிரச்சனை ஏற்படும்.
இந்த வைகயில் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், மதிப்பு மிக்க பொருட்களை வைத்திருக்கும் இடங்களை எப்போதும் காலியாக வைத்திருக்கக் கூடாது.
அப்படி வைத்திருந்தால் எதிர்மறையான தாக்கம் உருவாகும் என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது. கொள்கலன்களை காலியாக வைக்காமல் இருப்பதே, உங்களது செல்வத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உதவும்.
வீட்டிவ் வெற்றுப்பாத்திரங்கள் இருந்தால் அவற்றில் தண்ணீர் ஊற்றி குடிக்க வேண்டும். அரிசி பாத்திரத்தை ஒரு போதும் காலியாக வைக்கக்கூடாது. இது வறுமைக்கு வழிவகுக்குமாம்.
குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இரவில் அரிசி பானையை காலியாக வைக்கக்கூடாது என சொல்லப்படுகிறது. குளியலறையில் இருக்கும் வாளியை காலியாக வைக்க கூடாது.
இதனால், தீய சக்திகள் உங்கள் வீட்டிற்குள் நுழையச் செய்யும் என சொல்லப்படுகிறது. இவற்றில் மிகவும் முக்கியமானது உங்கள் பர்ஸ் அல்லது வாலட் எப்போதும் காலியாக இருக்கக்கூடாதாம்.
நிதியுடன் வாலட் தொடர்புடையது என்பதால், மறந்தும் கூட காலியாக வைத்து விடாதீர்கள். செல்வம் மற்றும் நிதி வளர்ச்சியை மேம்படுத்த, எப்போதும் உங்கள் பணப்பையில் சிறிது பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |