சாணக்கிய நீதி: கணவன் மனைவிக்குள் சண்டை வரவே கூடாதா? இதை செய்தாலே போதும்
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்டகள் எல்லா காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
இன்றளவும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். சாணக்கிய நீதியின் அடிப்படையில் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வரமால் இருக்க தூங்கும் முன்னர் பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கணவன் - மனைவிக்குள் சண்டைகளை தவிர்க்க...
திருமண வாழ்க்கை என்றால் நாள் தோறும் ஆயிரம் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் சண்டை வருவதும் வழக்கமாக விடயம் தான்.
சாணக்ய நிதியில் கணவனும் மனைவியும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க படுக்கைக்கு செல்லும் முன்னர் கட்டாாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
கணவன் மனைவிக்குள் அன்பு மற்றும் ஒற்றுமை அதிகரிக்க இரவு உணவை கணவனும் மனைவியும் ஒன்றாக சாப்பிட வேண்டும். முடிந்தால், இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வதன் மூலம் உறவு இன்னும் பலப்படும்.அதனால் இருவருக்கும் இடையில் மரியாதையும் நம்பிக்கையும் அதிகரிக்கின்றது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
கணவன் மனையிக்குள் துணையின் விருப்பத்தை ஒரு போதும் புறக்கணிக்கணிக்க கூடாது. விருப்பங்களை அலட்சிய படுத்துவது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் எனவே உங்கள் துணையின் உடல் உள ரீதியான தேவையை தூங்கும் முன்னர் நிறைவேற்ற வேண்டியது அவசியம் இதனால் தேவையற்ற மன கஷ்டங்களை தவிர்த்துக்கொள்ள முடிவதுடன் இருவருக்கும் இடையில் காதலும் அதிகதிக்கும்.
இரவு தூங்குவதற்கு முன்னர் நிச்சயம் கணவன் மனைவி பேசுவதற்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இது இன்றியமையாதது. நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் பெரிதாக பேசிக்கொள்ள நேரம் இருப்பதில்லை. அதனால் பல விடயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.
அதனை ஈடு செய்ய இரவில் நன்றாக சிரித்து பேசி, தேவைகள் மற்றும் விருப்பங்கள் தொடர்பில் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் சண்டைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
படுக்கை அறைக்குள் நுழைந்தவுடன் கணவன், மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்தும் செயல்களில் ஈடுப்படுவது முக்கியம் முக்கியமாக ஒருவரையொருவர் தழுவி கொண்டு தூங்குவதன் மூலம் காதல் அதிகதிக்கின்றது மேலும் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இது துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |