பர்ஸில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கனுமா? இதை மறக்காமல் செய்திடுங்க
வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து பொருட்களில் ஏதேனும் ஒன்று உங்களது பர்ஸில் இருந்தால் எப்பொழுதும் பணத்திற்கு பஞ்சமே வராதாம்.
மனிதர்கள் அனைவருக்கும் நல்ல வேலை செய்து பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும். ஆனாலும் சிலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கும்.
ஆம் தான் கையில் வைத்திருக்கும் பர்ஸில் எப்பொழுதும் பணம் தங்காமல் கஷ்டப்படுவார்கள். இவர்கள் சில பொருட்களை தனது பர்ஸில் வைத்திருந்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்.
பர்ஸில் இதை வைத்தால் போதும்
செல்வத்தின் கடவுளாக பார்க்கப்படும் லட்சுமி தேவியின் படத்தினை பர்ஸில் வைத்தால், கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் தேடி வருவதுடன், பணம் பர்ஸில் எப்போதும் தங்குமாம்.
இதே போன்று தாமரை விதைகளை உங்களது பர்ஸில் வைத்திருந்தால் பணத்தட்டுப்பாடு வராமல் லட்சுமி தேவியின் ஆசீர்வாதமும் நிலைத்திருக்கும்.
அரிசியை உங்களது பர்ஸில் வைத்திருந்தால் வீண்செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், பணமும் நன்றாக சேருமாம்.
அதுபோல லக்ஷ்மி யந்திரத்தை உங்கள் பர்சில் வைத்துக் கொண்டால், செல்வத்தை தவிர நேர்மறை ஆற்றலையும் கொடுக்குமாம்.
பர்ஸில் எப்பொழுதும் ஒரு நாணயம் மற்றும் ஒரு பத்து ரூபாய் நோட்டு வைத்திருக்க வேண்டும். இதனை எக்காரணம் கொண்டும் செலவழிக்கக்கூடாது என்பதை நினைவில் தை்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |