Vastu Tips: சமைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
சமைக்கும் போது எந்த திசை பார்த்து சமைக்கக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சமையலறை வாஸ்து
சமைக்கும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அதன் தீய பலன்களை அனுபவிக்க நேரிடும். எந்த திசையில் சமைக்கக்கூடாது.
தெற்கு நோக்கி சமைப்பது ஆபத்தாக கருதப்படுகின்றது. மேற்கு நோக்கியும் சமைக்க வேண்டாம். இவ்வாறு சமைத்த உணவை உண்பதால் நோய்வாய்ப்பட நேரிடுமாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி சமைக்க வேண்டும். இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்குமாம்.
உடைந்த பாத்திரத்தில் சமைக்கவே கூடாதாம். உடைந்த பாத்திரத்தில் சமைக்கும் வீடுகளில் லட்சுமி தேவி நிற்பதில்லையாம்.

படுக்கையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. தட்டை கையில் வைத்தும் சாப்பிடக்கூடாது. வாஸ்துப்படி இது நல்லதல்ல.
சமைக்கும் போது கெட்ட எண்ணங்களை வைத்திருக்கக்கூடாது. சமைக்கத் தொடங்குவதற்கு முன் அன்னபூரணி தேவியை நினைக்க வேண்டும். சமைத்த உணவை குறை சொல்லக்கூடாது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    |