லாக்கரில் பணம் சேரவில்லையா? அப்போ இது உங்களுக்கான வாஸ்து டிப்ஸ்
பொதுவாக சில வீடுகளில் வாஸ்துக்கள் படி தான் எல்லா விடயங்களும் செய்வார்கள்.
ஆன்மீக ரீதியாக இது போன்று நடந்து கொள்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என அவர்கள் நம்புகிறார்கள்.
அந்தவகையில் வாஸ்துக்கள் பார்க்கும் போது படுக்கையறை வாஸ்து, வரவேற்பு அறை வாஸ்து, சமையல் அறை வாஸ்து, வியாபார நிலையங்கள் வாஸ்து என அனைத்து விடயங்களுக்கும் வாஸ்துக்கள் இருக்கின்றன.
அந்த வகையில் செல்வத்தை சேர்க்கும் லாக்கருக்கு கூட ஒரு வாஸ்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், வீட்டில் அனைத்து செல்வங்களை சேர்த்து வைக்கும் லாக்கருக்கு வாஸ்து பார்க்கப்படும்,இது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
லாக்கரில் பண சேர டிப்ஸ்..
1. வீடுகளில் பணம், நகை இவை இரண்டில் எதுவாக இருந்தாலும், நாம் லாக்கரில் தான் வைப்போம். இவ்வாறு வைக்கும் போது சில அதனை கவனம் இல்லாமல் கண்ட இடங்களில் வைப்பார்கள்.
இதனால் பணச்செலவு வீட்டில் அதிகமாகின்றது. இதனை தடுக்க வேண்டும் என்றால் பணப்பெட்டியை வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு சுவரில் சாய்த்தால் போல் வைக்க வேண்டும்.
2. கண்ணாடி என்பது ஒன்றை இன்னொன்று போல் காட்டும் ஒரு அரிய வகை ஊடகமாகும். இதனை வைத்து கூட நாம் வாஸ்து டிப்ஸ்களை பின்பற்றலாம்.
அந்த வகையில் லாக்கருக்கு முன் எப்போது ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும். இது பண வரவை அதிகப்படுத்தி லக்ஷிமியை வீட்டில் நிரந்தரப்படுத்துகின்றது.
3. பண ஆலையை ஊதா நிறத்தில் வடிவமைக்க வேண்டும். ஏனெனின் ஊதா நிறம் செல்வத்தை குறிக்கும். இது வாஸ்து படி செல்வத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள்.