சமையலறை வாஸ்து டிப்ஸ்... கிச்சன்ல இதையெல்லாம் சிந்திடாதீங்க! பாரிய பிரச்சினை ஏற்படும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையில் சில பொருட்களை சிந்தினால் என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நமது வாழ்வில் சில துன்பங்களையும், இன்பங்களையும் அனுபவித்து வரும் நிலையில், சில பிரச்சினைகளும் நம்மை வாட்டி வதைக்கின்றது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் அற்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நமக்கு பல சிக்கல்களை கொண்டு வந்து விடுகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தினை பின்பற்றாதவர்கள் குடும்பத்தில் பிரச்சினையும், ஆரோக்கிய பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடமும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திரம் நம்புகிறது.
அந்த வகையில் சமையல் தயாரிக்கும் சமையலறை ஒரு முக்கியமானதாகும். சமையலறையில் சில காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சமையலறையில் சில பொருட்கள் கீழே விழுவது அசுபமாக பார்க்கப்படுகின்றது. காரணம் எதிர்மறை ஆற்றலுடன் துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.
மேலும் நமது வருமானத்திற்கும் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகின்றது. தற்போது சமையலறையில் கீழே எந்த பொருட்கள் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமையலறையில் சிந்தக்கூடாத பொருட்கள்
சமையலறையில் பெரும்பாலும் சமையலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தப்படும் நிலையில், இதனை அடிக்கடி கீழே சிந்த வாய்ப்பு அதிகம். ஆனால் நல்லெண்ணெய்யை கீழே சிந்துவது அசுப பலன்களின் அறிகுறியாகும். ஏனெனில் நல்லெண்ணெய் சனி பகவானுக்கு தொடர்புடையதும், சனி கிரகத்தை குளிக்கவும் செய்கின்றது. ஆதலால் நல்லெண்ணெய் கீழே சிந்தினால் பல பிரச்சினைகள் ஏற்படும்.
சமையலறையில் பால் பொங்குவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பால் காய்ச்சும் போது அடிக்கடி பொங்கி வழிந்தால், அது அசுபமாக பார்க்கப்படுகின்றது. ஜோதிடத்தின் படி பால் சந்திரன் கிரகத்துடன் தொடர்புடையதாகும். ஆதலால் அடிக்கடி பால் பொங்கி வழிந்தால், சாதகத்தில் சந்திர கிரகம் பலவீனமாவதை குறிக்கின்றது. பால் பொங்கி கீழே சிந்தாமல் இருக்க பால் காய்ச்சும் பாத்திரத்தில் ஒரு கரண்டியை போட்டு வைப்பது சிறந்த வழியாக இருக்கும்.
சமையலின் சுவையை திருப்தி செய்யும் பொருளில் முக்கியமானது உப்பாகும். உப்பை கீழே சிந்துவது கெட்ட சகுணமாகும். உப்பு சந்திரன் மற்றும் சுக்கிரனின் பிரதிநிதித்துவமாக கருதப்படுவதுடன், உப்பு கீழே சிந்தினால் வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |