வீடுகளில் மயிலிறகு வைப்பது நல்லதா?
பொதுவாகவே சிலர் வீடுகளில் மயிலிறகை அழகிற்காக வைப்பார்கள். இந்த மயிலிறகானது இந்து மதத்தவர்களால் புனிதமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், தமிழ் கடவுளான முருகனின் வாகனம் என்பதாலும், கிருஷ்ண பகவானின் கிரீடம் என்பதாலும், அதுமட்டுமட்டுமில்லாமல் அதிர்ஷ்டத்திற்காகவும் மங்களகரத்திற்காகவும் வீட்டில் வைத்திருப்பார்கள்.
சாஸ்திரப்படி வீட்டில் மயிலிறகுகளை வைத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் மயிலிறகு வைத்தால்
1. வீடுகளில் மயிலிறகுள் வைத்தால் நேர்மறை ஆற்றல்கள் இருக்கும்.
2. மயிலிறகுகளால் தோஷங்கள் நீங்கும்.
3. உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம், தடைகள் எனப் பலப்பிரச்சினைகள் சந்தித்தால் உங்கள் வீட்டுப் படுக்கையறையில் மயிலிறகை வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
4. படுக்கையறையின் சுவரில் இரண்டு மயிலிறகுகளை ஒன்றாக வைத்தால் கணவன் - மனைவி இடையில் இடைவெளி குறையும்.
5. பூஜையறையில் மயிலிறகை வைத்து பூஜை செய்தால் தடைப்பட்ட வேலைகள் எல்லாம் முடித்து பொருளாதாரம் முன்னேறும்.
6. வீட்டுப் பூஜையில் 5 மயிலிறகுகளை வைத்தால் வீட்டில் எதிர்மறை சக்திகள் நீங்கி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.
7. வீட்டில் பிள்ளைகள் பிடிவாத குணம் கொண்டிருந்தால் மயிலிறகை விசிறி போல செய்து காற்று வீசினால் குழந்தைகளின் குணங்கள் மாற்றமடையும்.