Vastu Tips: வீட்டில் இந்த திசையல் மட்டும் செருப்பை கழற்றி போடாதீங்க... துரதிர்ஷ்டம் துரத்துமாம்
Vastu Tips: வாஸ்து படி நாம் அணியும் காலணியை வீட்டில் எந்த திசையில் கழற்றி போட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாஸ்து சாஸ்திரம் என்பது நாம் தொழில் செய்யும் இடத்தையும், வாழ்விடத்தையும் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை காட்டுகின்றது. வாஸ்து பொதுவாக நமது வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தில் எதிர்மறை மற்றும் நேர்மயைான விதிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. வீட்டில் உள்ள பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று ஒரு வழிகாட்டல் உள்ளது.
ஒரு பொருளை தவறான திசையில் வைத்தால் அது நமது வாழ்க்கையை பாதிப்பதுடன், பல சிக்கல்களையும் உருவாக்குமாம். அந்த வகையில் நாம் காலில் அணியும் செருப்புகளை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

காலணி, ஷு இவற்றினை எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தில் காலணி, ஷு இவற்றினை தலைகீழாக வைப்பது கூடாது. அவ்வாறு வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் குறைந்துவிடுமாம்.
காலணியை அங்கும் இங்குமாக கழற்றி வீசக்கூடாது. இவை அசுபமாக கருதப்படுவதுடன், வறுமையை கொண்டுவருவதுடன், நிதி நெருக்கடிக்கும் ஆளாக்கிவிடுமாம்.

வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் காலணி, செருப்புகளை வைப்பது கூடாது. இவையும் எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவதுடன், இந்த திசைகள் லெட்சுமி தேவிக்கு உரியவையாக கருதப்படுகின்றது. மேலும் அன்னலட்சுமியும் கோபமடைவாராம்.
அதே போன்று காலணிகளை அதற்காக ரேக்கில் அடுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீடு சுத்தமாக இருப்பதுடன், வாஸ்து தோஷங்களும் ஏற்படாதாம். காலணி அடுக்கை எப்போதும் தெற்கு திசையிலேயே வைக்க வேண்டும்.
வீட்டு வாசலில் காலணியை அடுக்கி வைப்பது மிகவும் தவறாகும். இவை துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதுடன், குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகளையும், மோதல்களையும் உருவாக்கக்கூடும்.

பொதுவாக காலணிகளை வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசைகளில் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் வீடுகளில் அமைதியான சூழல் நிலவுவதுடன், பண வரவுக்கான வாய்ப்பும் கிடைக்குமாம்.
அதுமட்டுமின்றி காலணியை எப்பொழுதும் சுத்தமாக இருப்பது அவசியம். காலணியை கழற்சி விடும் போது அவை சுத்தமாக இருக்கின்றதா? அழுக்குகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்கவும். இவை எதிர்றையான ஆற்றலை விலக்கி வைக்க உதவுமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |