நகைக்கடை கொள்ளையில் சிக்கிய குற்றவாளிகள்... 15 கிலோ தங்கம் மீட்பு
Madurai Jewelry Robbery: மதுரையில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகைக்கடையில் நடந்த கொள்ளை
மதுரை தனிஷ்க் நகைக்கடை ஒன்றில் இரண்டு தினங்களுக்கு முன்பு 15 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளியை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
கடைசியில் குற்றவாளியின் பெயர் நிஷாந்த் என்று தெரியவந்ததுடன், அவர் கொள்ளையடிக்க அணிந்து வந்த ஆடைகளையும் சுரேஷ் வயல்காடு பகுதியில் வைத்து எரித்துள்ளார்.
இது போலிசாருக்கு தெரியவந்த நிலையில், அவரது வீட்டில் சென்று நடத்தியுள்ளனர். அப்போது நிஷாந்த் தலைமறைவாகிய நிலையில் அவரது தந்தை சுரேஷ்(55) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை விசாரித்த போது நிஷாந்தின் தோழி திருப்பாலை அய்யர்பங்களாவில் வசித்து வந்த மீனாட்சி(26) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீனாட்சி இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து அதிகமான ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மீனாட்சியிடம் இருந்த 5 கிலோ தங்க நகையை போலிசார் பறிமுதல் செய்த நிலையில், மீதமுள்ள நகைகளுடன் நிஷாந்த் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து மாடக்குளம் மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கண்டுபிடிக்கப்பட்டு, மீனாட்சியை அங்கு அழைத்து சென்று புதருக்குள் குழி தோண்டி புதைக்கப்பட்ட நகையை போலிசார் மீட்டுள்ளனர்.
இதுவரை 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளைக்கும், கடை ஊழியர்களுக்கும் தகவல் உள்ளதா என்றும் விசாரிக்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |