Vastu Tips: பிறந்த குழந்தை அருகில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி பிறந்த குழந்தைகளின் அருகில் வைக்கக்கூடாத சில பொருட்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இந்து சமய மக்கள் வாஸ்து என்பதை பெரும்பாலான இடங்களில் அவதானித்து அதற்கேற்ப செயல்முறையில் ஈடுபடுவார்கள்.
தற்போது வாஸ்து முறைப்படி வீட்டில் பிறந்த குழந்தை அருகில் வைக்கக்கூடாத பொருட்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்த பொருளை வைக்காதீங்க...
செடிகள் வீட்டின் அழகை மேம்படுத்தினாலும், கற்றாழை, கூரான இலைகள் அல்லது முட்கள் கொண்ட செடிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவதுடன், குழந்தைக்கு அசௌகரியத்தையும், காயத்தையும் ஏற்படுத்தலாம்.
இதே போன்று கண்ணாடியை குழந்தையின் அறையில் வைக்கக்கூடாது. இவை குழந்தைக்கு அமைதியற்ற சூழலை ஏற்படுத்துவதுடன், தூக்கமும் பாதிக்கப்படும்.
உடைந்த பொம்மைகளையும் அருகில் வைக்கக்கூடாது. ஒழுங்கற்ற இணக்கமற்ற சூழலை ஏற்படுத்துவதுடன், அவர்களின் ஆற்றல் ஓட்டத்தையும் பாதிக்கும்.
வீட்டை அழகுப்படுத்த ஓவியங்களை நாம் வைக்கும் நிலையில், ஆனால் குழந்தைகள் அருகில் வன்முஐற அல்லது மோசமான தலைப்புகளை சித்தரிக்கும் ஓய்வியத்தை வைக்கக்கூடாது. இதற்கு பதிலாக மகிழ்ச்சியான ஓவியங்களை வைத்தால் அவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள்.
குழந்தைகள் இருக்கும் அறையில் அதிக எடையுள்ள பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் குழந்தைக்கு அசெளகாரியமாகவும், சங்கடமாகவும் இருக்கும். அதற்கு பதிலாக லகுவாக, குழந்தைகளை பாதிக்காத சாமான்களை வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |