கற்பூரம் வாஸ்து டிப்ஸ்! கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்
பூஜை மற்றும் ஜோதிட பரிகாரங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கற்பூரத்தை குறித்து ஆச்சரியமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.
தோஷத்தை நீக்கும் கற்பூரம்
இந்தியாவில் இந்து மதத்தினர் செய்யும் பூஜைகள் மற்றும் ஜோதிட பரிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தவும் செய்கின்றது.
இந்த கற்பூரத்தில் இருக்கும் வாஸ்து எவ்வாறு தோஷத்தை நீக்குகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் கஷ்டத்தினால் மன அமைதி பாதிக்கப்படுவதுடன், பதட்டமான சூழ்நிலையுடனும் இருக்கும நபர்கள், சிறிய கற்பூரத்தை உங்களது பாக்கெட்டிலோ, பர்ஸிலோ வைத்து இடது கையில் வைத்துக் கொண்டால் உங்களது பிரச்சினை சரியாகும்.
கற்பூரமானது ஜோதிடத்தி்ன் படி சுக்கிரனைக் குறிக்கின்றது. தோல் பிரச்சினை இருப்பது, முகம் கவர்ச்சியிழந்து இருப்பது வீனஸ் கிரகத்தின் வீனமாகும். இதற்கு கற்பூரத்தை துணியில் சுற்றி உங்களுடன் வைத்துக் கொள்ளவும்.
சிலரது ஜாதகத்தில் காலசர்ப்பம், ராகு, பித்ரு தோஷம் நிவர்த்தி இவைகள் இருந்தால், பர்ஸ் அல்லது பாக்கெட்டில் சிறிது கற்பூரத்தினை பருத்தி துணியால் கட்டி வைக்கவும். அதிலும் சிகப்பு துணியாக இருந்தால் கூடுதல் பலன் கிடைக்குமாம். 7 நாட்களுக்கு ஒருமுறை இந்த கற்பூரத்தை மாற்றினால் தோஷங்கள் நீங்கி அமைதி கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |