Vastu Tips: படுக்கையறை எந்த திசையில் இருக்க வேண்டும்?
வாஸ்து படி வீட்டின் படுக்கை அறை எந்த திசையில், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை இந்த பதில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீடு கட்டும் போது சில வாஸ்து சாஸ்திரங்களை பார்த்து தான் கட்டுவது வழக்கம். அவ்வாறு கட்டினால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்
அந்த வகையில், வீட்டின் படுக்கையறையை சரியான திசையில் கட்டினால் வீட்டில் செல்வம் செழிப்பதுடன், மகிழ்ச்சியும், நிம்மதியும் எப்பொழுதும் நிறைந்திருக்கும்.
வீடு கட்டும் வாஸ்து
வீட்டின் படுக்கையறையானது தென்மேற்கு அல்லது தெற்கு அல்லது மேற்கு திசைகளில் தான் இருக்க வேண்டும். படுக்கையறையில் இருக்கும் படுக்கையானது மரத்தால் இருக்க வேண்டும். மேலும் செவ்வகம் மற்றும் சதுர வடிவில் மட்டும் இருக்க வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
தூங்கும் போது தலையை தெற்கு அல்லது கழக்கு திசை நோக்கி தான் இருக்க வேண்டுமாம். வடக்கு திசையை நோக்கி படுத்தால் மனஅழுத்தம் அதிகரிக்கும்.
வடகிழக்கு திசையில் படுக்கையறை நிச்சயமாக இருக்கக்கூடாது. ஏனெனில் அது பூஜை அறையாகத்தான் இருக்க வேண்டுமாம். தென்கிழக்கு திசையிலும் இருக்கக்கூடாதாம். இந்த திசை சமையலைக்கான திசையாகும்.
அதே போன்று படுக்கையறை மற்றும் சமையலறை இரண்டும் பக்கம் பக்கம் இருக்குமாறு கட்டக்கூடாது. அவ்வாறு கட்டினால் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.
படுக்கையறை கதவிற்கான திசை கிழக்கு மேற்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டுமாம். ஜன்னலானது கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து மட்டுமே இருக்க வேண்டும்.
முக்கியமாக, பெட்ரூமில் இருக்கும் படுக்கைக்கு முன்பு எப்போதும் கண்ணாடி இருக்க கூடாது. அது தீங்கு நடக்குமாம்.
படுக்கையறை சுவற்றின் நிறமானது நீலம், பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிறங்களில் இருந்தால் மட்டுமே, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |