Vastu Tips: வீட்டில் அதிர்ஷ்டத்தை பெருக்கும் மூங்கில் செடி- எப்படி வளர்ப்பது?
மிக வேகமாக வளரும் தாவரங்களில் ஒன்றான மூங்கில் செடியை வீட்டில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பது பலரும் அறிந்ததே.
மிக அழகானதும், நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் மூங்கில் செடியை வீட்டின் எந்த பகுதிகளில் வளர்ப்பது என தெரிந்து கொண்டு வளர்ப்பது அவசியம்.
வீடு, பணியிடம் என எல்லாவற்றிலும் மூங்கில் செடி வைக்கலாம், ஏனெனில் இது செல்வத்தை ஈர்க்கும் தாவரமாகும்.
ஏன் மூங்கில் செடி?
மிக பசுமையாக வளரும் மூங்கில் செடியானது நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதால் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும், இதற்கு மூங்கிலை வீட்டின் நுழைவாயில் அருகில் வளர்க்க வேண்டும்.
மிக முக்கியமாக இதை காற்று சுத்திகரிப்பு ஆலை என குறிப்பிடலாம், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
சுத்தமான காற்றை சுவாசிக்கும் போது நோய்த்தொற்றுகளில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளலாம், சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்கும்.
பானை மண்ணில் அல்லது தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி கொள்கலனில் மூட இதை வளர்க்கலாம், நீர்ப்பாசனம் பற்றி கவலைப்படத்தேவையில்லை.
அதாவது ஈரமில்லாத வளமான மண்ணில் வளரும் தண்மை கொண்டது, குறைந்தளவு சூரியஒளியே போதுமானது என்பதால் வீட்டின் படுக்கையறையில் மூட வளர்க்கலாம்.
வீட்டில் என்றென்றும் சந்தோஷம் நிலைக்க, தொழிலில் முன்னேற்றம் என வாழ்வின் அடுத்தடுத்த உயர் நிலைக்கு செல்ல வாஸ்துப்படி மூங்கில் செடியை வளர்த்திடுங்கள்.
இதற்காக மூங்கில் செடியை 8 அல்லது 9 தண்டுகள் கொண்ட குழுவாக வளர்த்திடுங்கள், 4 தண்டுகள் கொண்ட குழுக்கள் துரதிஷ்டத்தை கொண்டு வரும்.
புல் வகையை சேர்ந்த மூங்கில் பார்ப்பதற்கு பசுமையாக மனதின் கவலைகளை நீங்கி துன்பத்தை போக்கிவிடும்.
எந்த திசையில் வளர்ப்பது?
வாஸ்துப்படி வீட்டின் கிழக்கு மூலையில் மூங்கிலை நடவேண்டும், வீட்டின் நுழைவாயில் முன்பாகவும் வளர்க்கலாம்.
தென்கிழக்கில் வளர்ப்பது செல்வத்தை ஈர்க்கும், மறைமுக ஒளியிலும் நன்றாக வளரும், நேரடி சூரிய ஒளியில் வைப்பதை தவிர்த்திடுங்கள், ஏனெனில் சூரிய ஒளியில் கருகிவிடும்.
2 அல்லது 3 அடி உயரம் வரை வளரும் மூங்கில் செடிகள் மங்களகரமானவை, சிவப்பு நாடாவால் கட்டிவைப்பது தொழிலில் வெற்றி பெறச்செய்யும்.
செடியை தொட்டிகளில் வளர்த்திடுங்கள், நிலத்தில் வளர்ப்பதால் பெரிதாக வளரும் என்பதால் எதிர்மறை ஆற்றலை கொண்டுவரலாம்.
இதேபோன்று தென்மேற்கு திசையில் வளர்க்க வேண்டாம், செடியை காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |