Vastu Tips: தூங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க... பணப்பிரச்சனை ஏற்படுமாம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நாம் தூங்கும் போது செய்யும் செய்யக்கூடாத தவறுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நாம் தூங்கும் போது செய்யக்கூடாத சில தவறுகளைக் குறித்து தொடர்ந்து கொள்வோம்.
செய்யக்கூடாத தவறுகள்
வாஸ்து சாஸ்திரத்தின்படி தூங்கும்போது எந்தவிதமான எண்ணெய்யையும் படுக்கையறையில் வைத்திருக்கக்கூடாது. அவ்வாறு நாம் வைத்திருந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுமாம்.
மேலும் எந்த வகையான மருந்துகளையும் உங்களது படுக்கைக்கு அருகில் வைத்து தூங்குவதை தவிர்க்கவும். இவ்வாறு நாம் வைத்திருந்தால் வீட்டில் உள்ள நபர்களில் யாராவது நோய்வாய்ப்படுவார்களாம்.
Photo: francesca tosolini/unsplash
பணப்பையை ஒருபோதும் படுக்கைக்கு அருகில் வைக்கக்கூடாது. இவ்வாறு வைத்தால் வீட்டில் வறுமை ஏற்படும்.
அதே போன்று தண்ணீர் பாட்டிலை படுக்கைக்கு அருகில் ஒருபோதும் வைக்கக்கூடாது. படுக்கைக்கு அருகில் தண்ணீர் வைத்து தூங்கினால் எதிர்மறை சக்திகள் வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்குமாம்.
படுக்கைக்கு அருகில் காலணிகள் அல்லது செருப்புகளை ஒருபோதும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் வைத்திருந்தால் எப்போதுமே வீட்டில் பிரச்சனையை எதிர் கொள்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |