2024ல் துரஷ்டங்களை துரத்தியடிக்கும் செடிகள்.. வீட்டில் எந்த இடத்தில் வளர்க்கணும் தெரியுமா?.
பொதுவாக சில செடிகள் வீட்டில் உள்ளேயும், வெளியிலும் நட்டு வைத்து வளர்ப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
இந்த செடிகள் நம்முடைய வாழ்வில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய தன்மை கொண்டதாகவும் விளங்குகின்றன.
வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் அழகு, தூய்மையான காற்று இப்படி பல நன்மைகளை எமக்கு கொடுத்தாலும் சாஸ்த்திரங்களின் படி நேர்மறையான தாக்கங்களை கொடுக்கின்றது.
அந்த வகையில், எந்தெந்த செடிகளை வீட்டில் வைப்பதால் நம்முடைய பிரச்சனைகள் தீரும், நன்மைகள் அதிகம் நடைபெறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து செடிகள்
சாஸ்திரங்களின் குறிப்பிட்ட செடிகளை வீட்டில் வைத்து வளர்ப்பதால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என சொல்லப்படுகிறது.
பொதுவாக வீட்டிற்குள் வைத்து வளர்க்கப்படும் செடிகளால் நேரடியான இயற்கை மற்றும் பாசிடிவ் ஆற்றலை அதிகப்படுத்தும்.
இந்த செடிகள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து, வீட்டில் இருப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை குறைப்பதுடன், சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துகின்றன.
இது கடன் பிரச்சினைகளை தீர்த்து செல்வம், பணம், சொத்துக்கள் இப்படி ஏகப்பட்ட விடயங்களை அதிகப்படுத்தும்.
1. துளசி செடி
வீட்டில் துளசி செடி வளர்ப்பதால் ஆற்றல் மிகுந்த, அதிர்ஷ்டம் கிடைக்கும். இவ்வாறு வளர்க்கப்படும் செடிகள் காற்றை சுத்தப்படுத்தி கொசுக்களை சூழலிலிருந்து அப்புறப்படுத்துக்கின்றது.
துளசியை எங்கு வைத்தாலும் சூரி ஒளியை ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த செடியை ஜன்னல், பால்கனி, வீட்டின் முன்புறம், பின்புறம் என எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
2. மூங்கில் செடி
பொதுவாக வாஸ்து மற்றும் ஃபெங் சுயி என்னும் சீன சாஸ்திரத்தின் படி செல்வ வளம், ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடிய செடியாக மூங்கில் செடி பார்க்கப்படுகின்றது.
இந்த செடியை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்ப்பதால் பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது 5 செடி வைப்பதால் செல்வமும், 6 வைத்தால் அதிர்ஷ்டமும், 7 வைத்தால் ஆரோக்கியமும், 21 வைத்தால் அளவில்லாத திடீர் அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தையும் தரும். அத்துடன் மாசுக்களிலிருந்தும் எம்மை பாதுகாக்கின்றது.
3. ரப்பர் செடி
ரப்பர் செடியின் இலைகள் வட்டவடிவமாக இருப்பதால் அநேகமான வீடுகளில் வளர்க்கிறார்கள். இதனால் அதிகப்படியான அதிர்ஷ்டம் வீட்டிற்குள் வரும் என மக்கள் நம்புகிறார்கள்.
ரப்பர் செடிக்கு இயற்கையாகவே காற்றை சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிவிடும் தன்மை இருப்பதால் இது வீட்டில் நிம்மதியான சூழலை உருவாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |