கொரோனாவால் பாதிக்கப்பட்டு ICUல் பிரபல இயக்குனர்! கவச உடைகளுடன் உள்ளே நுழைந்த அந்த நபர்?

vasantha balan lingusamy
By Fathima May 15, 2021 11:08 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது, பொதுமக்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

பிரபல இயக்குனரான வசந்தபாலனுக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டு, ICUல் சிகிச்சை பெற்று வந்தார், தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட வசந்தபாலன் இயக்குனர் லிங்குசாமியை பாராட்டி நீண்ட கவிதையொன்றை எழுதியுள்ளார்.

அதன் வரிகள்,

வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம்.

வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில்
நெருக்கடியான நேரத்தில்
அன்பானவர்கள் பக்கம் நிற்பது
புதிய வசனம்

போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி
 இரவு மிருகமாய் உழண்டவண்ணம் இருக்கிறது

விடிந்தும் விடியாமலும்
அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது
 எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது

தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது

இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது
உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது
 பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது
வேறு வழியின்றி முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது

மெல்ல என் படுக்கையை ஒட்டி
 ஒரு உருவம் நின்றபடியே
 எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது.

ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.
 எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது

 மருத்துவரா இல்லை
 செவிலியரா என்று எனக்கு வித்தியாசம் தெரியவில்லை

 உள்ளிருந்து "டாக்டர்" என உச்சரிக்கிறேன்
 "லிங்குசாமிடா" என்றது அந்த குரல்

அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி
 "டே! நண்பா" என்று கத்தினேன்
 "பாலா" என்றான் அவன் குரல் உடைந்திருந்தது

வந்திருவடா…
 "ம்" என்றேன்

என் உடலைத் தடவிக்கொடுத்தான்
 எனக்காக பிரார்த்தனை செய்தான்
 என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது.

தைரியமாக இரு என்று
என்னிடம் சொல்லிவிட்டு செல்லும்போது
 யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.

இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று
 மனம் முப்பது ஆண்டுகள் முன்னே பின்னே ஓடியது.

"உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா….." என்றேன்
 நானிருக்கிறேன்
நாங்களிருக்கிறோம்
என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது.

கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது.
 ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..
ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..." என பதிவிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US