கமல்ஹாசனால் தான் இந்த வாய்ப்புக்களை இழந்தேன்: வாரிசு நடிகை ஜெயசுதா குற்றச்சாட்டு!
நடிகர் கமல்ஹாசனால் நிறைய படவாய்ப்புக்களை இழந்ததாக வாரிசு நடிகை ஜெயசுதா தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.
இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.
வாய்ப்புகளை இழந்த நடிகை
சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஜெயசுதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி மலையாளம், பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சலங்கை ஒலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா தெரிவித்துள்ளார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இதில் அவர் தெரிவித்ததாவது,
சலங்கை ஒலி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நான்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். இயக்குனர் அதற்கான அட்வான்ஸ் பணமும் கொடுத்துவிட்டார்.
ஆனால் கமல்ஹாசன் சரியான திகதியை உடனே கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமானது அதற்குள் நான் வேறு படத்தில் நடிக்க சென்று விட்டதால் சலங்கை ஒலி படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.
சலங்கை ஒலி படத்தில் நான் நடிக்காததால் கே. விசுவநாத் அவர்களுக்கு என் மீது கோபம் கொண்டார்.
ஆனால் அந்த கேரக்டருக்கு ஜெயப்பிரதா தான் சரியான நடிகை என்பது அவரின் நடிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.