மாப்பிள்ளையுடன் அழைப்பிதழ் கொடுக்க கிளம்பிய சரத்குமார் மகள்- வைரலாகும் புகைப்படம்
வரலக்ஷ்மி சரத்குமார் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வரலக்ஷ்மி சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார்.
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து பரபரப்பாக நடித்து வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலை சச்தேவ் என்பவரை இன்னும் சில நாட்களில் திருமணம் செய்யவுள்ளார்.
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றது.
இதன்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |