உங்களையும் விட்டு வைக்கவில்லையா? வரலட்சுமியிடமும் அட்ஜஸ்ட்மன்ட் பண்ண சொன்னாங்களாம்!
படவாய்ப்புக்காக நடிகரும், இயக்குநரும் அட்ஜட்ஸ் செய்ய சொன்னதாக வரலட்சுமி சரத்குமார் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த சம்பவம் தற்போது பெரும் வைரலாக பரவிவருகிறது.
வரலட்சுமி சரத்குமார்
பிரபல நடிகரின் மகளான வரலட்சுமி சரத்குமார் 2012ஆம் ஆண்டு சிம்புவிற்கு ஜோடியாக போடா போடி திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர். இவர் தேர்தெடுக்கும் படங்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் உதாரணமாக தாரதப்பட்டை, சண்டக்கோழி2 , விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தை ஏற்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், நடிகை வரலட்சுமியும் நடிகர் விஷாலும் காதலித்து வந்தார்கள். சரத்குமார் மற்றும் விஷாலுக்கு இடையில் சில பிரச்சிகனைகள் காரணமாக இவர்களின் திருமணம் தடைப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியுமா?
வரலட்சுமி அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது, சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது பற்றி பேசியிருந்தார். எனக்கே பாலியல் சீண்டல்கள் நடந்திருக்கிறது.
பிரபல நடிகர் ஒருவரும் முன்னணி இயக்குனர் ஒருவரும் வருவார் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியுமா..? என கேட்டிருக்கிறார்கள்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென்றால் அப்படி ஒரு பட வாய்ப்புகள் வேண்டாம் என மறுத்து விடுவேன்.
எந்தவொரு குற்றஉணர்வும் இல்லாமல் இரவில் நிம்மதியா தூங்க வேண்டும். நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டேன் என ஓபனாக கூறியிருக்கிறார்.