உடல் எடையை விரைவில் குறைக்கும் வரகரிசி பொங்கல் ... இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக சிறுதானியங்கள் ஊட்டச்சத்துக்ளை அதிகம் கொண்டுள்ளது. குறிப்பாக வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் இதை அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மேலும் இந்த வரகு அரிசி கொழுப்பு அதிகம் இல்லாதது. இதில் இருக்கும் கொழுப்பும் நல்ல கொழுப்பு என்பதால் இதய ஆரோக்கிகயத்துக்கு நம்பை பயக்கும்.
வரகரிசியில் நார்ச்சத்து செறிந்து காணப்படுவதால், மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குணங்களை கொண்டிருப்பதால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த வரகரிசியை கொண்டு காலை உணவுக்கு நாவூரும் சுவையில் எவ்வாறு வரகரிசி பொங்கல் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வரகரிசி - 1/2 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
தண்ணீர் - 4 கப்
உப்பு - 1தே.கரண்டி
தாளிப்பதற்கு தேவையானவை
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - சிறிது
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் வரகரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை நன்றாக கழுவிவிட்டு பின்னர் அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரம் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்த வரகரிசியில் நீரை வடிகட்டிவிட்டு, குக்கரில் போட்டு சிறிது நேரம் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தண்ணீர் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பொங்கலுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் வரகரிசி பொங்கல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |