நான் இவ்வாறு இருப்பதற்கு அருண் விஜய் அம்மா தான் காரணம்! வனிதாவின் ஓபன் டாக்
நடிகை வனிதா தனது பெரியம்மாவும், நடிகர் அருண் விஜய் அம்மாவுமான முத்து கண்ணு குறித்து பேசியுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாருன்னும் அசரது முதல் தாரம் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த குழந்தைகள் தான் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர்.
பின்பு விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
இதில் வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வருவதுடன், சமீபத்தில் மகளை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து, பிக் பாஸ் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்தார்.
அருண் விஜய் அம்மா தான் காரணம்...
இந்நிலையில் வனிதா அருண் விஜய்யின் அம்மா முத்து கண்ணு குறித்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
சமையல் செய்வதை உங்களது அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு வனிதா பதில் அளித்துள்ளார்.
அதில் தனது அம்மா மஞ்சுளா அவ்வளவாக சமைக்க மாட்டார்... சில உணவுகள் மட்டுமே அவருக்கு சமைக்க தெரியும் என்றும் எங்கள் வீட்டில் முத்து கண்ணு பெரியம்மா தான் நன்றாக சமைப்பார்.
அவரைப் பார்த்து தான் சமையல் செய்வதற்கு கற்றுக்கொண்டேன். நானும் சமைக்க ஆரம்பித்த போது அவருக்கும், எனக்கும் போட்டி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய சாப்பாடு மட்டுமே பெரியம்மா சமைத்து வந்த நிலையில், நான் சமைக்க ஆரம்பித்த பின்பு பல நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களும் சமைக்க ஆரம்பித்துவிட்டனர்.
அவர்களின் சாப்பாடு மிகவும் அருமையாக இருக்கும் என்று பெரியம்மாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |