மிருகமாக மாறிய கலையரசன்.. வெடித்த வன்முறை- இதற்கு காரணம் கனியா?
பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களிடையே டாஸ்க்கில் வாய்தகராறு ஏற்பட கலையரசன் மிருகமாக மாறிய காட்சி மற்ற போட்டியாளர்களை பதற வைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.
சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.
அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி, அப்சரா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
மிருகமாக மாறிய கலையரசன்
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நடுவர்களாக இருந்த பார்வதியும் வாட்டர் மிலன் ஸ்டாரும் மற்ற போட்டியாளர்களின் ஜுஸ் போத்தல்களை எடுத்து குறைக் கூறிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கோபமடைந்த ஆதிரை போத்தல்களை கீழே போட்டு உடைக்க ஆரம்பித்து விட்டார். அவரை தொடர்ந்து மிருகமாக மாறிய கலையரசன் அங்கிருந்த மற்ற போத்தல்களை கீழே தள்ளி விட்டு, மேசையையும் அங்கிருந்து ஒரு ஓரமாக கோபத்தில் தள்ளி விடுகிறார்.
இதற்கிடையில் பேசிய கனி, “சரியான நியாயம் கிடைக்காத பொழுது வன்முறை வெடிக்கும்..” என தூண்டி விடும் வகையில் பேசுகிறார். இவர் பேசியதை பார்க்கும் பொழுது இவர் தான் வன்முறையை தூண்டி விடுகிறார் என்பது போன்று தெரிகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |