இந்த ராசி ஆண்கள் கணவராக கிடைப்பது பெரும் வரமாம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் தங்களின் திருமண வாழ்க்கை குறித்து கற்கனைகள் மற்றும் ஆசைகள் இருப்பது இயல்பு.
பெரும்பாலான பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையாக வரும் ஆண் பணக்காரனாக இல்லாவிட்டாலும், நேர்மையானவராகவும், அன்பானவராகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின்னர் தவைசிறந்த கணவனாக மாறிவிடுவார்களாம்.
அப்படி தன் மனைவிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்ளும் உன்னத குணம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
அன்பின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசி ஆண்கள் இயல்பாகவே காதல் மற்றும் திருமண வாழ்க்கை மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் நம்பகத்தன்மை, பொறுமை மற்றும் அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு, விசுவாசம் என்பது உடல் ரீதியாக உண்மையாக இருப்பது மட்டுமல்ல இவர்கள் மனதளவில் கூட தங்களின் வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசி ஆண்கள் இயற்கையாகவே மென்மையான குணம் கொண்டவர்களாகவும், காதல் செய்வதில் கில்லாடிகளாகவும் இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் உணர்ச்சி ரீதியாக இணக்கமான மற்றும் பாதுகாக்கும் ராசிகளில் ஒன்றாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் மனைவிக்கு மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள்.
இவர்கள் எப்போதும் தனது குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பார்கள், மேலும் தனது மனைவி ஒவ்வொரு நாளும் நேசிக்கப்படுவதையும் ஆதரிப்பதையும் உறுதி செய்வார்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் பரிபூரணவாதிகளாகக் காணப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் துணைவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விடவும் தங்கள் உறவுகளில் ஒழுங்கு மற்றும் நிலைத்தன்மையை மதிப்பதால் அவர்கள் மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள்.
இந்த ராசி ஆண்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும், தங்கள் துணையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் அடிக்கடி உறுதிப்படுத்திக்கொள்வார்கள். துணைக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
