பிக்பாஸ் வனிதா இப்போ என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா?
பிக் பாஸ் புகழ் வனிதா வனிதா ஃபேஷன் டிசைனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
ஃபேஷன் ஷோவில் தான் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் ஒய்யார நடைபோட்டு, தனது புது பிசினஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வனிதா விரைவில் தனது பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
நீண்ட நேரம் செல்போனில் கடலை போட்ட மனைவி - ஆத்திரமடைந்த கணவர் செய்த பகீர் செயல்!

புதிய அவதாரம் எடுத்த வனிதா
வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
இவர் நடிப்பில் தற்போது 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என டஜன் கணக்கிலான படங்களில் நடித்து வருகிறார் .
இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அதுமட்டும் இன்றி அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் கடந்தாண்டு தொடங்கினார்.
இவ்வாறு நடிப்பை தவிர்த்து பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வரும் வனிதா, தற்போது ஃபேஷன் டிசைனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.