நீண்ட நேரம் செல்போனில் கடலை போட்ட மனைவி - ஆத்திரமடைந்த கணவர் செய்த பகீர் செயல்!
கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டம் காவிபிபுரா கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவரின் மனைவி வனஜாக்ஷி (31). இவர்களுக்கு திருமணம் 15 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளன. இதனிடையே, இந்த தம்பதிக்கு இடையே சில காலமாகவே செல்போன் பயன்படுத்துவதில் தகராறு எழுந்துள்ளது.
வனஜாக்ஷி செல்போனுக்கு அடிமையாக கணவர் தொடர்ந்து அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த சண்டை கடந்த நாட்களுக்கு முன் உச்சம் அடைந்துள்ளது.
அப்போது மனைவி அதிக நேரம் வேறு ஒருவரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்துள்ள கணவன், மனைவியை அறைந்துள்ளார்.
ஆபாச காணொளி அனுப்பி அரங்கேறும் டார்ச்சர்! நடிகர் நகுலின் மனைவி உடைத்த உண்மை
மனைவியும் கோபத்தில் சமையல் அறைக்குச் சென்று உருட்டுக்கட்டையை எடுத்துவந்து கணவர் அசோக்கை அடிக்க முயன்றுள்ளார்.
இதை அறிந்த கணவர் மனைவியின் பிடியில் இருந்து உருட்டுக் கட்டையை பிடுங்கி, இவர் பதிலுக்கு வேகமாக அடித்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த மனைவி சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். வனஜாக்ஷியின் சகோதரர் அவரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது சகோதரியின் மரணம் தெரியவர காவல்துறையிடம் புகார் தகவல் அளித்துள்ளார்.
பின்னர், காவல்துறை வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.