ரத்தம் வழிந்தபடி வலியில் துடிதுடித்த வனிதா விஜயகுமார்! பிரதீப் ஆதரவாளர் தாக்கினாரா?
நடிகை வனிதா விஜயகுமார் மீது பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ்
பிக் பாஸ் 7தமிழ் ,ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ்.
தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.
இதயனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளில் சவாலான போட்டியாளராக விளங்கினார். ஆனால் இடையில் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் புயலை இணையத்தில் கிளப்பியது. பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கமல்ஹாசனையும் பிரதீப் ஆண்டனிக்கு சப்போர்ட் செய்து விமர்சித்தனர்.
மறுபுறம் இந்த பிக்பாஸ் 7 வது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அதேபோல் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
வனிதா மீது தாக்குதல்
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா, நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது., முகத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘ நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன் . பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே.
என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று சொல்லி கொள்பவர். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என் காரில் இறங்கி நடந்துக் கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்தேன்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நபர், ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்குறீங்களா?’ என கேட்டார். அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றீயா என சொல்லிவிட்டு என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து பயங்கர வலியாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது என் அருகில் யாரும் இல்லை என பதிவிட்டுள்ளார்.குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |